Panguvaniham - Today

பலவீனமான சர்வதேச சந்தைகளின் புண்ணியத்தால் நேற்றைய நமது சந்தைகள் வலுவாய் சரிந்திருக்கின்றன. மிக முக்கியமான தாங்கு நிலைகள் உடைபட்டுவிட்ட நிலையில் காளைகள் பரிதாபமான நிலையில் நிற்கின்றன என்றால் மிகையில்லை. தேசிய நிஃப்டி மிக முக்கியமான மாதாந்திர தாங்கு நிலையான 4411 நிலைகளுக்கு கீழ் முடிவடைந்திருப்பது மேலதிக சரிவுகளை வரவேற்கும் அம்சம்.

இன்றைக்கும் நமது சந்தைகள் சர்வதேச சந்தைகளின் போக்கினையே பிரதிபலிக்கும். தேசிய நிஃப்டியில் 4411 நிலைகளுக்கு மேல் சந்தைகள் மீள வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் கீழ் நிலையில் தேசிய நிஃப்டி கடந்த 11ம் தேதிய கீழ் நிலையான 4364 ஐ உடைக்கும் பட்சத்தில் 4261 வரையில் கீழிறங்கும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.

நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்…..

4208 – 4228 – 4267 – 4294 – 4307 – 4367 – 4411 – 4445 – 4483 – 4532